தேசிய செய்திகள்

உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது + "||" + Over 9,800 Coronavirus Cases In India, 273 Deaths, Most In 24 Hours

உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது

உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளன. மொத்த இறப்பு எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்து உள்ளது. மீட்பு வீதம் அல்லது மக்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் 48.27 சதவீதம் ஆகும் என கூறி உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஊர்டங்கில்  தளர்வு அறிவிக்கப்பட்டதால், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஜனவரி 30- ந் தேதி கேரளாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது இந்தியாவில்  226770 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

கடைசி 15 நாள்களில் மட்டும் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9,304 பேர் புதியதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

இன்று இது மேலும் அதிகரித்து 9851 புதிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதே வேகத்தில் கொரோனா பரவி வந்தால் , இன்னும் இரு நாள்களில் இத்தாலியை நாம் முந்தி விடுவோம்.

தற்போது, கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி 6- வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் 2,33,836 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை இந்தியாவில் 2,34,919 கொரோனா நோயாளிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.  எனவே, நாளை இந்தியா 6- வது இடத்துக்கு வந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் , இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கும் செய்தி. இத்தாலியை விட இறப்பு சதவிகிதம் 5 மடங்கு இந்தியாவில் குறைவு ஆகும் .இந்தியாவில் கொரோனா வைரஸால் இன்று வரை 6348 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் 33, 689 பேர் இறந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 12- வது இடம். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில்  அமெரிக்கா , ரஷ்யா, பிரேசில், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலிக்கு  அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
2. சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருவோர் விவரம்
சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
3. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
4. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.