தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 273 பேரின் உயிரை பறித்த கொரோனா + "||" + Corona, which killed 273 people in a single day in India

இந்தியாவில் ஒரே நாளில் 273 பேரின் உயிரை பறித்த கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 273 பேரின் உயிரை பறித்த கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 273 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி, 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளன. இதில் மராட்டியத்தில் மட்டும் 77,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27,256 பேருக்கும், டெல்லியில் 25,004 பேருக்கும், குஜராத்தில் 18,584 பேருக்கும், ராஜஸ்தானில் 9,862 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக பாதிகப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,588 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,348 ஆக அதிகரித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 2,710 பேரின் உயிரை காவு வாங்கி இருக்கிறது. மேற்கண்ட இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள்
சீனாவுடன் உள்ள பொருளாதார தொடர்பை துண்டிக்க இந்தியா வேகமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை எடுத்து உள்ளது.
2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு
இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்து இருக்கிறது.
3. இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு
சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததற்கு அந்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு; இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம், அதை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது.