தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா + "||" + Corona to dead grandmother at railway station in Rajasthan

ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா

ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா
ராஜஸ்தானில் ரெயில் நிலையத்தில் இறந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், 

மும்பையில் இருந்து புறப்பட்ட ஒரு ரெயில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தது. அதில் இருந்து இறங்கிய ஒரு 65 வயது மூதாட்டி, ரெயில் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல், அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா தாக்கியது உறுதி ஆனது.

இதையடுத்து, அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த 99 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த மூதாட்டிக்கு மும்பை ரெயில் நிலையத்தில் கொரோனா அறிகுறி பரிசோதிக்கப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: ஒரு மாத பரபரப்பு முடிவுக்கு வந்தது
ராஜஸ்தான் சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது.
2. பரபரப்பு திருப்பங்களுக்கு மத்தியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று அம்மாநில சட்டபேரவை கூடுகிறது.
3. ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன?
ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. ராஜஸ்தானில் ஒரு மாத மோதலுக்கு முடிவு: முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் சச்சின் பைலட் சந்திப்பு
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது இருவரும் பகையை மறந்து கை குலுக்கிக்கொண்டனர்.
5. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 608 பேருக்கு கொரோனா
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றைய தினம் இதுவரை 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.