மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 3 ரெயில்கள் இயக்கம் வழித்தடங்கள் விவரம் + "||" + 3 more trains in Tamil Nadu Routes Details

தமிழகத்தில் கூடுதலாக 3 ரெயில்கள் இயக்கம் வழித்தடங்கள் விவரம்

தமிழகத்தில் கூடுதலாக 3 ரெயில்கள் இயக்கம் வழித்தடங்கள் விவரம்
தமிழகத்திற்கு வருகின்ற 12-ம் தேதி முதல் கூடுதலாக 3 ரயில்கள் இயக்க ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை

திருச்சி - செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாக ரெயில், அரக்கோணம் - கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரெயில் இயக்கவும், தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தெற்கு ரெயில்வே சார்பில் மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதனையடுத்து, திருச்சி - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரண்டு ரெயில்களும், அரக்கோணம் - கோவை வழித்தடத்தில் ஒரு ரெயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை உள்ளிட்ட 4 வழி தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த 3.5 ஆண்டுகளில் ரெயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும்; ரெயில்வே மந்திரி
அடுத்த 3.5 ஆண்டுகளில் ரெயில்வே துறை 100% மின்மயம் ஆக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2. கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - பியூஸ் கோயல் தகவல்
கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று ரெயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...