கொரோனா தடுப்பூசி நெருக்கத்தில் இருக்கிறோம் -வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டாக்டர் அந்தோணி பாசி


கொரோனா தடுப்பூசி நெருக்கத்தில் இருக்கிறோம் -வெள்ளை மாளிகையின் ஆலோசகர் டாக்டர் அந்தோணி பாசி
x
தினத்தந்தி 10 Jun 2020 9:48 AM GMT (Updated: 10 Jun 2020 9:48 AM GMT)

கொரோனா இன்னும் முடிவடையவில்லை என்று அமெரிக்க கொரோனா வைரஸ் நிபுணரும் வெள்ளை மாளிகையின் ஆலோசகருமான டாக்டர் அந்தோணி பாசி கூறியுள்ளார்.

வாஷிங்டன்

பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு (BIO) நடத்திய கூட்டத்தின் போது தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரான பாசி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயை அவரது "மோசமான கனவு" என்று விவரித்தார். நான்கு மாத காலப்பகுதியில், இது உலகம் முழுவதையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை. 

மில்லியன் கணக்கான நோய்த்தொற்றுகள் உலகளவில் இருக்கிறது. இது மிகச் சிறிய கால கட்டத்தில் ஒடுக்கப்படுகிறது.ஆனால், வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியது என்று ஆச்சரியப்பட்டதாக ஒப்புக்கொண்ட போதிலும், தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் அதன் நெருக்கத்தில் இருக்கிறோம் என்று தான் நம்புவதாக அந்தோணி பாசி கூறினார்.


Next Story