உலக செய்திகள்

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியது + "||" + Corona impact in Russia is close to 5 lakhs

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியது

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியது
ரஷியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.
மாஸ்கோ, 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,52,783 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 6,358 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் ரஷியாவில் 216 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் தினந்தோறும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாஸ்கோவில் புதிதாக 1,195 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் இதுதான் மாஸ்கோவில் ஒரு நாளில் தொற்று உறுதி செய்யப்பட்ட மிக குறைந்த பாதிப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் ஆர்வம்
ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்று தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
3. இலங்கையில், அனைத்து பள்ளிகளும் திறப்பு
இலங்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.
4. ரஷியாவில் நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
5. ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.