தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது + "||" + Action to control corona: Central committee comes to Chennaic

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னைக்கு மத்திய குழு வருகிறது
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னைக்கு மத்திய குழு வருகிறது.
புதுடெல்லி, 

இந்தியாவிலேயே மும்பை நகரில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்குகிறது.

மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்து உள்ளது.

மத்திய அரசு அமைத்துள்ள குழுக்களில் ஒன்று ஒரு வாரத்துக்குள் சென்னை வர இருக்கிறது.

இந்த குழுவினர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

இதேபோல் டெல்லி, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் மத்திய குழுவினரும் அந்தந்த மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. காவலர்களுடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்
காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
2. ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை.
3. செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு
செவிலியர்கள் தங்களது தாய்மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்டது.
4. “தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், அதனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை போலீசார் நூதன நடவடிக்கை
சாலையில் தேவை இன்றி சுற்றி திரிந்தோருக்கு போலீசார் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்து நூதன முறையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.