மாநில செய்திகள்

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார் + "||" + Water will be opened tomorrow at Mettur Dam

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு  எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்
காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார்.
சென்னை,

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து கடந்த மே 18-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.

எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

சேலத்தில், முதல்-அமைச்சர்

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 2 மணிக்கு சாலை மார்க்கமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று(வியாழக்கிழமை) காலை 9.50 மணியளவில் சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து அவர் சேலத்தில் குரங்குச்சாவடியில் விழாப் பகுதிக்குச் செல்கிறார். அங்கு நெடுஞ்சாலை பாலத்தை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சேலம் முகாம் அலுவலகத்துக்கு செல்கிறார்.

மேட்டூர் அணையில்...

12-ந் தேதி (நாளை) சேலம் முகாம் அலுவலகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். மேட்டூர் அணையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு காலை 9.30 மணிக்கு செல்கிறார். பின்னர் காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீரை திறந்துவிடுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு
மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 45,000 கனஅடியாக உயா்ந்துள்ளது.
2. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
3. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி நெல்லை வருகை; கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி நெல்லை வருகிறார். அப்போது அவர், கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதுடன், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
4. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.
5. மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.