தேசிய செய்திகள்

35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு + "||" + Corona for 35 children: What is the action taken? Government of TamilNadu to respond Supreme Court order

35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று இருந்ததாகவும், அலட்சியமாக இருந்ததால் மற்ற சிறுவர்களுக்கும் தொற்று பரவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது, காப்பகங்களில் கொரோனா தொற்று பரவியது எப்படி? அங்கு குழந்தைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், குழந்தைகள் காப்பகத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் விசாரணை ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
2. உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பதிவு செய்யும் ரஷியா
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
3. சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டம்
இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.
4. கொரோனா அச்சம்: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை உள்ளே நடத்துவதா ? வெளியே நடத்துவதா? ஆலோசனை
கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை வேறு இடத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: மாவட்டம் வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு
ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக நிலவரம் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.