மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி! + "||" + From Mettur Dam for Cross Cultivation He opened the water Chief Minister Palanisamy!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!
காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் இன்று திறக்கப்பட்டுள்ளது.
சேலம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக மேட்டூர் அணையில் நீர் திறந்து வைத்துள்ளார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட 86 ஆண்டுகளில் இதுவரை 17 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதிக்கு அணை திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008-ம் ஆண்டு தான் ஜூலை 12-ம் தேதி அணை திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது.

அணை வரலாற்றில் ஜூன் 12 க்கு முன்பாக 10 முறை பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது சரியாக ஜூன் 12ஆம் தேதியில் 17-வது முறை தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரும்பாலும் காலதாமதமாக 60 முறை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளது.
 
86 ஆண்டுகளுக்கு முன்பு 4 கோடியே 80 லட்ச ரூபாயில் காவிரியின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களின் பிரதான நீராதாரம். அதிகபட்சம் 120 அடிக்கு நீர்தேக்கி 93.47 டிஎம்சி நீரை இருப்பு வைப்பதால் காவிரி டெல்டா நெற்களஞ்சியமாய் திகழ அணையும் ஒரு காரணமாகிறது. டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறக்க வேண்டிய தேதி ஜூன் 12. அப்படித் திறந்தால் ஜனவரி 28 வரை 231 நாட்களுக்கு 300 டிஎம்சி அளவுக்கு காவிரி கடைமடைக்கும் பயணித்து பயிர்களின் தாகத்தையும் உயிர்களின் பசியையும் போக்கும்.

சேலம், ,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை , திருவாரூர், கடலூர் , பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16 புள்ளி 05 லட்சம் ஏக்கர் நிலங்களை செழிப்பாக்குகிறது மேட்டூர் அணையின் நீர். இதில் குறுவை, சம்பா, தாளடி என முப்பருவ நெல் சாகுபடி நடைபெறும்.

பாசனத்திற்கு நீர் திறக்க அணையில் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாகவும், நீர் இருப்பு 60 டிஎம்சிக்கு மேலாகவும் இருக்க வேண்டும். நீர்வரத்தையும் நீர் இருப்பையும் பொறுத்தும் அணை திறக்கும் தேதி மாறுபடும்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அணையில் நீர் குறைவாக இருப்பது, காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 12-ம் தேதி திறக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மேட்டூர் அணையில் தற்போது, 101.70 அடி நீர் மட்டம் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு
கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
2. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றார்
நெல்லை செல்லும் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆவல்சூரன்பட்டி அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
3. மதுரையில் 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரி முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
4. தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை ஏற்பாடுகள் தீவிரம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகையையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.