தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது + "||" + he number of people affected by coronation in Maharastra has exceeded 1 lakh.

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது. 

இந்த நிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,141 ஆக அதிகரித்து உள்ளது.

இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 127 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 717 ஆக அதிகரித்து உள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 1,718 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,793 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 8 பேர் பலி, இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
கட்டிட இடிபாடுகளில் இருந்து 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2. மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 17,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 17,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 311 காவலர்களுக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 311 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...