மாநில செய்திகள்

சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது + "||" + Chennai: Corona in Rayapuram is approaching 5 thousand

சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது
சென்னை ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.
சென்னை

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது. 

தண்டையார்பேட்டை மண்டலத்தில்  3 ஆயிரத்து 781ஆகவும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 464ஆகவும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 108ஆகவும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.திருவொற்றியூர்-1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அண்ணாநகரில் 2 ஆயிரத்து 781ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 660ஆகவும், அடையாறில் ஆயிரத்து 607ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 268ஆகவும் உயர்ந்துள்ளது.

 இதன்மூலம் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 14 ஆயிரத்து 614 பேர் குணமான நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு- மத்திய அரசு
பெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கம்-பாகிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
3. நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலி
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 டாக்டர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
4. வண்டலூர் சிங்கங்களையே மிரட்டும் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்! தனிமைபடுத்தி சிகிச்சை
வண்டலூர் பூங்கா சிங்கங்களுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்று இல்லை அதை விட அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்ற நோய் என தெரியவந்து உள்ளது.
5. ‘உயிரியல் ஆயுதம்’ கருத்து தெரிவித்த : நடிகையும் மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு
‘உயிரியல் ஆயுதம்’ என கருத்து தெரிவித்த சினிமா நடிகையும், மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்