உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு + "||" + Authorities in Beijing place parts of the city in lockdown after six new domestic coronavirus cases were reported.

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு
ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகிய பின்னர் பீஜிங்கில் சிலபகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பீஜிங்

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீன தலைநகரில் உள்நாட்டில் பரவிய மேலும் ஆறு கொரோனா பாதிப்புகளை தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து பீஜிங்கில் உள்ள அதிகாரிகள் நகரத்தில் உள்ள பெரிய மொத்த சந்தையை தற்காலிகமாக மூடினர்.

பீஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். 2 நாளில் 3 பேருக்கு பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உணவு சந்தையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் ஜிங்ஷென் கடல் உணவு சந்தையையும் மூடி, பீஜிங்கின் மொத்த உணவு சந்தைகள் அனைத்திற்கும் உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளை சோதிக்க உத்தரவிட்டனர்.

ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகிய பின்னர் பீஜிங்கில் சிலபகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சீனா  கொரோனா உள்ளூர் பரவலுக்கான முதல் பாதிப்பை தற்போது அறிவித்து உள்ளது.- 52 வயதான ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சீன தலைநகரை விட்டு வெளியேறவில்லை என்றும்,நகரத்திற்கு வெளியில் இருந்து யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா
தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.
2. ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி- தமிழக அரசு
அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
3. தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம்: ஜி ஜின்பிங்
தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
4. எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி
எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
5. கோவிட் 19 பெருந்தொற்றினால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்
கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் அழற்சியை ஏற்படுத்தி பல உறுப்புகளை பாதிக்கிறது என்பது தெரிந்ததே. இதில் குறிப்பாக நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத உண்மை.