உலக செய்திகள்

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கும் கொரோனா + "||" + Former Pakistani prime minister confirmed corona infection Following Afridi

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கும் கொரோனா

அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கும் கொரோனா
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்றிலிருந்து தனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தான் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்ளுமாறு ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்நிலையில் அப்ரிடிக்கு அடுத்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான பிறகு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில், “இம்ரான் அரசுக்கும், பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் கழகத்திற்கும் (NAB) நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்ரிடி, கம்பீர் மோதல் போக்கை கைவிட வேண்டும்: வக்கார் யூனிஸ் வேண்டுகோள்
அப்ரிடி, கம்பீர் ஆகியோர் தங்களது மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று வக்கார் யூனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...