தேசிய செய்திகள்

குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் + "||" + 4.4 magnitude earthquake strikes near Rajkot in Gujarat, tremors felt in Kutch too

குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்
குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ராஜ்கோட்

குஜராத் மாநிலம்  ராஜ்கோட்டில் இன்று மதியம் 12:57 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என  நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

கட்ச் பச்சாவ் பகுதியிலும் நடுக்கம் ஏற்பட்டது. ஐந்து நிமிடங்களுக்குள் இரண்டு முறை நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அது 4.4 ரிக்டர் அளவு கொண்டது, இரண்டாவது நடுக்கம் மதியம் 1 மணிக்கு உணரப்பட்டது, அது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக இருந்தது. இந்த இரண்டு நிலநடுக்கங்களின் மையப்பகுயாக பச்சாவ் அருகே அமைந்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் ராஜ்கோட்டைத் தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று  இரவு 8:13 மணிக்கு பதிவாகி உள்ளது.

குஜராத்தில் கடந்த காலங்களில் மூன்று பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டு உள்ளது. ஜனவரி 26, 2001 அன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.9 ஆக இருந்தது மற்றும் 100 வினாடிகளுக்கு மேல் நீடித்தது.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கத்ரா, ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் ஐந்து கி.மீ ஆழத்தில்இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு & காஷ்மீரில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மிசோரத்தில் மிதமான நில நடுக்கம்
ரிக்டர் அளவில் 3.8 கொண்ட பூகம்பம் மிசோரத்தைத் தாக்கியது
2. ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்
ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.
3. ஜப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.