உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் கொரோனா:சந்தையில் மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு + "||" + Beijing shuts market after coronavirus detected on salmon chopping board

சீனாவில் மீண்டும் கொரோனா:சந்தையில் மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு

சீனாவில் மீண்டும் கொரோனா:சந்தையில்  மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு
சீனா சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள மக்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக அதிகரிக்கும் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.

50 நாட்கள் நோய் பாதிப்பு இல்லாமல் இருந்த சீனாவில் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், நாட்டின் பிற பகுதிகளிலும் பரவி வரும் வகையுடன் இந்த வைரஸ் ஒத்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.இது வேறு இடத்திலிருந்து வந்தது என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், இப்போதைக்கு, வைரஸ் எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம்: ஜி ஜின்பிங்
தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
2. எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி
எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
3. இந்தியர்களுக்கு விசா வழங்க மறுக்கும் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு
சீனாவுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.
4. குவாட் கூட்டமைப்புக்கு எந்த ஆதரவும் கிடைக்காது: சீனா
குவாட் கூட்டமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
5. கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம் என அந்த நாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.