மாநில செய்திகள்

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Tamil Nadu war hero's family gets relief from Rs. 20 lakh relief

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மகன் ராணுவ வீரர் கே.பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.


ரூ.20 லட்சம்

இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கலெக்டர் மரியாதை

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது தொல்லியல் துறை தகவல்
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் வருகிற 31-ந்தேதி வரை திறக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
2. ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு பஸ், ரெயில்கள் ஓடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ்நாட்டில், ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் எந்த தளர்வுகளும் கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
3. பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட கூடாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராக சிறப்பு மூத்த வக்கீலாக ஏ.எல்.சோமயாஜி நியமனம் தமிழக அரசு உத்தரவு
சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக சிறப்பு மூத்த வக்கீலாக ஏ.எல்.சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
5. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாளிக்க நடவடிக்கை 24 வாரிய தலைவர்கள் நியமனம் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
பா.ஜனதாவில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக அவர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 24 வாரியங்களுக்கு தலைவர்களை நியமித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உத்தரவிட்டு உள்ளார்.