மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் + "||" + Bomb threat to actor Rajinikanth’s house

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
கர்நாடகாவில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது என புரளி ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ரஷியாவில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
3. நான் பெரும் புகழோடு, நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் தான் - ரஜினிகாந்த்
நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்
4. நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவனால் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5. முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.