உலக செய்திகள்

ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது + "||" + In Russia, 18 people were vaccinated for the first time

ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

ரஷிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது.

ரஷியாவில் 5.60 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேரின் உயிரை பறித்தும் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 18 பேருக்கு செலுத்தி பரிசோதித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் ஆர்வம்
ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்ய ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2. ரஷியாவில் நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேர் பலி
மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.
3. போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி
போதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி
4. சீனா-ரஷியா உறவுகளில் விரிசல்; சீனா உளவு பார்த்ததாக ரஷியா குற்றச்சாட்டு
சீனா-ரஷியா உறவுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது சீனா உளவு பார்த்ததாக ரஷியாகுற்றம் சாட்டியது, எஸ் -400 ஏவுகணை வழங்குவதை ஒத்திவைக்கிறது.
5. ரஷியாவில் கொரோனா தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை - 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது
ரஷிய நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்கிறது.