உலக செய்திகள்

ரஷியாவில் கோர விபத்து: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 6 பேர் உடல் கருகி பலி + "||" + Crash in Russia: 2 cars collide face-to-face; 6 people kills body

ரஷியாவில் கோர விபத்து: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 6 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் கோர விபத்து: 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தன; 6 பேர் உடல் கருகி பலி
ரஷியாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
மாஸ்கோ, 

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான மொர்தோவியாவின் தலைநகர் சாரன்சுக்கில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்து கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது.

அதனைத் தொடர்ந்து எதிர்த் திசையில் வந்த காருடன் இந்த கார் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன.

இந்தக் கோர விபத்தில் 2 கார்களில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்புவது வரவேற்கத்தக்கது - ரஷியா
விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவுக்குத் திரும்புவது வரவேற்கத்தக்கது என ரஷியா கூறி உள்ளது.
2. ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது இங்கிலாந்து அழகி ; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷிய எதிர்க்கட்சித்தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்தது ஒரு இங்கிலாந்து அழகிதான் என ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டி உள்ளது.
3. நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4. ரஷியாவில் இந்திய, சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு - சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
ரஷியாவில் நடக்கும் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல்: தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள்.