உலக செய்திகள்

ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல் + "||" + Australian PM says country under cyber attacks by 'state-based actor'

ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்

ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நாடு ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
சிட்னி

பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கத்தை குறிவைத்து வெளிநாட்டு சக்திகளால் ஆஸ்திரேலியா இணைய தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய  பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:-

ஒரு 'அதிநவீன அரசு ஒன்று இணைய தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கிறது. இது பல மாதங்களாக நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அதி நவீன தாக்குதலை முன்னெடுக்க உலகில் விரல் எண்ணிக்கையிலான நாடுகளே உள்ளன .

இருப்பினும் இதுவரையான விசாரணையில் எந்த தனிப்பட்ட தரவுகளும் களவு போகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒரு அதிநவீன இணைய தாக்குதலால் குறிவைக்கப்படுகின்றன.அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், கல்வி, சுகாதாரம், அடிப்படை சேவைகள் வழங்குவோர் மற்றும் பிற உள்கட்டமைப்பை செயற்படுத்துவோர் என இந்த பட்டியல் நீள்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்பு கொண்டு பேசி உள்ளேன் என கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் மற்றும் மூன்று பெரிய அரசியல் கட்சிகள் மீது சைபர் தாக்குதலை சீனா முன்னெடுத்தது கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
2. சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்
சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
3. 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி ...11-வது முறை தாயாரே...!
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதத்தில் 10 முறை தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் அவர் தாயார் கனத்த மனதுடன் ஒரு முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
4. இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை
ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
5. ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.