தேசிய செய்திகள்

‘பாபிப்ளூ’, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு மிகுந்த பலன் அளிக்காது-மருத்துவ நிபுணர்கள் விளக்கம் + "||" + Remdesivir, Favipiravir antiviral drugs ‘no game changers’ in Covid fight, say medical experts

‘பாபிப்ளூ’, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு மிகுந்த பலன் அளிக்காது-மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

‘பாபிப்ளூ’, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு மிகுந்த பலன் அளிக்காது-மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
‘பாபிப்ளூ’, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு மிகுந்த பலன் அளிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, 

மனித சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்துகளோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பாபிப்ளூ பிராண்ட் பெயரில் விற்கப்படும் ‘பாவிபிரவிர்’ மாத்திரைகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் என மும்பையை சேர்ந்த கிளென்மார்க் மருந்து நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 எனவும் நிர்ணயித்தது.

இதைப்போல சிப்லா, ஹெடேரோ நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை பெற்றுள்ளன. இந்த மருந்தின் (ஊசி மருந்து) ஒரு டோஸ் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த மருந்துகள் கொரோனாவை தடுக்கும் என இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வரும் நிலையில், மேற்படி மருந்துகள் கொரோனாவுக்கு மிகுந்த பலன் அளிக்காது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிராக எந்த ஒரு மருந்தும் வலிமையாக செயல்பட்டதாக இந்த நாள் வரை ஆதாரம் இல்லை. எனவே அதுவரை எந்த மருந்தையும் ஆட்டத்தை மாற்றும் திறன் பெற்றதாக எங்களால் கூற முடியாது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருந்துகளின் பலன்களை எதிர்காலத்தில்தான் அறிய முடியும். எனினும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த மருந்துகள் உதவி புரிகின்றனவா? என்பதும் இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று கூறினார்.

இதைப்போல டெல்லி சாலிமர்பாக்கில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் விகாஸ் மவுரியா கூறும்போது, ‘பாபிப்ளூ, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் வேறு சில நோய்களுக்கு பயன்படுத்தக்கூடியவை. எனினும் இந்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒருசில வழிகளில் உதவி புரியும். அதனால் இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்கள் அனைவரும் குணமடைவார்கள் என கூற முடியாது’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று
ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா
ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...