தேசிய செய்திகள்

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் - சோனியா காந்தி + "||" + "Extend Supply Of Food Grains To Poor By 3 Months": Sonia Gandhi To PM

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் - சோனியா காந்தி

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் - சோனியா காந்தி
ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உட்பட கொரோனா வைரஸ் ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டார். 

நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய  மக்கள் எதிர்கொள்ளும் பசி நெருக்கடிக்கு தீர்வு காண உணவு உரிமைகள் விரிவாக்கப்பட வேண்டும்"

நாடு கடுமையான ஊரடங்கில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, லட்சக்கணக்கானவர்கள் வறுமை அபாயத்தில் உள்ளனர். வாழ்வாதாரங்களில் ஏற்படும் மோசமான தாக்கம் நாள்பட்ட உணவுப் பாதுகாப்பின்மைக்கு வழிவகுத்தது ... இலவச உணவு தானியங்களுக்கான ஏற்பாட்டை மேலும் ஒரு காலத்திற்கு நீட்டிக்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்

ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உணவு தானியங்களை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து செப்டம்பர் வரை வழங்க வேண்டும் என்று பல மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என அதில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள்: பிரதமர் மோடி
நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2. நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
3. கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி
கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
4. ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது.
5. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் என பிரதமர் மோடி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...