தேசிய செய்திகள்

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? - ப.சிதம்பரம் + "||" + ‘Ask PM Modi about 2,264 Chinese incursions since 2015’: Chidambaram hits back at Nadda

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? - ப.சிதம்பரம்

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? - ப.சிதம்பரம்
2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

லடாக் எல்லை மோதல் குறித்து சமூக வலைதளத்தில் காங்கிரஸ்- பா,ஜனதா தலைவர்கள் மோதி வருகின்றனர் 

பாஜக தலைவர் ஜே.பி.நடா  இந்தியாவின் வீரர்களை அவமதிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசை கெட்டு கொண்டார். மேலும் முன்னாள் பிரதமரின் ஆட்சிக் காலத்தில் 600 சீன ஊடுருவல்கள் நடந்ததாகக் கூறினார்.

இன்று, காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம், த்னது டுவிட்டரில் 2015 முதல் 2264 சீன ஊடுருவல்களை விளக்க தற்போதைய பிரதமரிடம் கேளுங்கள்? அவர் அந்த கேள்வியைக் கேட்கத் துணிய மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

காங்கிரஸ் ஆட்சியில் சீன ஊடுருவல்கள் இருந்தன, ஆனால் எந்தவொரு இடமும் ஆக்கிரமிக்கப்படவில்லை, இந்திய வீரர்கள் உயிரிழக்கவும் இல்லை.

2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. பா.ஜனதா எம்.பி அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தி
பா.ஜனதா எம்.பி.யும் ஊடகப்பிரிவு தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
3. ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெறும் விவகாரத்தில் கட்சியில் பிளவு
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு உள்ளது.
4. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. ராஜஸ்தான்: காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தகவல்
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.