மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு + "||" + District Collector to announce full curfew in Theni district

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால், மதுரையிலும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.


இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள பல்வேறு மாவட்டங்களில், நோய் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லலி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி நகர்ப்பகுதிகளில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு; மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.
3. திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
4. கோவை மாவட்டத்தில் 36 மணிநேரம் முழு ஊரடங்கு - அமலுக்கு வந்தது
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது.
5. மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.