தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ தலைவர் சிவன் + "||" + Private participation in the space sector The federal government's decision to allow is welcome ISRO leader Shivan

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - இஸ்ரோ தலைவர் சிவன்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது  - இஸ்ரோ தலைவர் சிவன்
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் நேற்று  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் சில துறைகளில் தனியார் பங்களிப்பு முக்கியம் என்றும் அதற்கு ஒப்புதல் அளித்தும் மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை நேற்று முடிவு எடுத்தது. 

இதில் விண்வெளித்துறையிலும் தனியார் பங்களிப்பை அனுமதித்து மத்திய அரசு முடிவு எடுக்கபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது:

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி, ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் - ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது விண்வெளி முயற்சிகளில் தனியார் துறையை கையாளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய  நிறுவனமாக செயல்படும், இதற்காக இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்
9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து இஸ்ரோ வருகிற நவம்பர் மாதம், 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
2. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.