உலக செய்திகள்

லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம் + "||" + Met Police said 22 officers were injured and two needed treatment at hospital. Four people were arrested

லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம்

லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம்
லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
லண்டன்

இங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு  விரைந்த சென்று தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர் . அப்போது ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டுவது போன்றும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது.

போலீசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இப்பகுதியில் ஏற்பட்ட இடையூறு மற்றும் மக்களின் பெரிய கூட்டம் காரணமாக தாங்கள் அழைக்கப்பட்டோம். ஆனால் இங்கு வந்த பின்பு, அவர்கள் நடந்து கொண்ட விதத்தால், சற்று பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் இருந்த குழுவினர் பாட்டில்கள் மற்றும் சில பொருட்களை வீசியதால், இதில் இரண்டு அதிகாரிகள் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் மற்றும் பொது ஒழுங்கு குற்றங்களுக்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டங்கள் சட்டவிரோதமானவை, அத்துடன் பொது சுகாதாரத்திற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவர் என்று போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், காயமடைந்துள்ள 22 பேரில் 2 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் பிரிதி படேல், இது ஒரு கேவலமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் மேயர் சாதிக் கான், இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, காவல்துறைக்கு எதிரான வன்முறைகள் பொறுத்துக் கொள்ள முடியாது. கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில், இது போன்ற பெரிய கூட்டங்கள் பொறுப்பற்றவை, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
3. ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை வீசி தாக்கி அழித்த இங்கிலாந்து விமானப்படை
ஐ.எஸ் அமைப்பின் 85 மைல் தூர குகையை ஏவுகணை கொண்டு இங்கிலாந்து விமானப்படை தாக்கி அழித்து உள்ளது.
4. கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி; புதிய ஆறு விதிகள்
இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
5. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.

ஆசிரியரின் தேர்வுகள்...