தேசிய செய்திகள்

டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த 16 வயது இளம்பெண் தற்கொலை + "||" + 16-Year-Old Delhi Girl, TikTok Star, Found Dead; Police Say Suicide

டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த 16 வயது இளம்பெண் தற்கொலை

டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த 16 வயது இளம்பெண் தற்கொலை
டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சியா கக்கார். 16 வயதே ஆன இவரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது.டிக்டாக்கில் சுமார் 11 லடசத்துக்கும் அதிகமான பேர் அவரை பின் தொடர்ந்தனர். டிக் டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் சியா இயங்கி வந்தார்.இந்த நிலையில், அவர் திடீரென இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

"இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையினால் இருக்கலாம். வேலையைப் பொறுத்தவரை அவர் நன்றாகவே இருந்தார். சியா ஒரு பிரகாசமான திறமைசாலி” என்று அவரது மேலாளர் கூறியுள்ளார்.

ஜூன் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு
ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
2. டிக் டாக்கில் வீடியோ பதிவிட ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! தலையில் சுட்டு படுகொலை: பதிவான காட்சி
டிக் டாக்கில் பதிவிட வினோதமான வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 20 வயது பெண் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: டிரம்ப்
டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. டிக் டாக்கை மைக்ரோசாப்ட் வாங்குவது உறுதி; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தம்
டிக் டாக்கை வாங்குவதை மைக்ரோசாப்ட் உறுதிபடுத்தியது; செப்டமபர் 15 ந்தேதிக்குள் ஒப்பந்தமாகிறது.
5. ‘டிக்-டாக்’ மூலம் ஒருதலைக்காதல்: தஞ்சையில் இருந்து நடந்து மதுரை வாலிபரை காண வந்த பெண்
‘டிக்-டாக்’ செயலியில் அறிமுகமான நபரை ஒருதலையாக காதலித்த பெண், அந்த வாலிபரை காண தஞ்சையில் இருந்து மதுரை வரை நடந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.