தேசிய செய்திகள்

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி + "||" + The death toll for coronation has been reduced by plasma therapy; Delhi CM

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி

கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி
பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிக உளவில் உள்ளது.  ஆனால், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  அதனால் கவலைப்பட தேவையில்லை.

நாங்கள் மருத்துவ பரிசோதனையை 3 மடங்கு உயர்த்தி உள்ளோம்.  ஆனால், பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வரை மட்டுமே உயர்ந்து உள்ளது.  மொத்த நோயாளிகளில், தோராய அளவில் 45 ஆயிரம் பேர் வரை குணமடைந்து உள்ளனர்.

பிளாஸ்மா தெரபியால் தீவிர ஆபத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது என்பது கடினம்.  ஆனால், மிதஅளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, அவர்களது நிலைமை கூடுதலாக மோசமடையாமல் இருப்பதற்கு இச்சிகிச்சை உதவும்.  இதுவே எங்களுக்கு கிடைத்துள்ள பரிசோதனை முடிவு ஆகும்.

எல்.என்.ஜே.பி. மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம்.  இதன்படி, எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை நாங்கள் அளிக்க தொடங்கிய பின்பு இறப்பு எண்ணிக்கை முன்பை விட குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய வரலாறை ஆராயும் படிப்பை படிக்க விருப்பம்; சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண் வாங்கிய மாணவி பேட்டி
இந்தியாவின் கடந்த கால வரலாறை ஆராயும் படிப்பை படிக்க விருப்பம் என சி.பி.எஸ்.இ. தேர்வில் 100% மதிப்பெண் வாங்கிய மாணவி பேட்டியில் கூறியுள்ளார்.
2. தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
ஊரடங்கில் தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
3. வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களால் மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
4. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
5. தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.