மாநில செய்திகள்

மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Madurai Today is the same day For 170 people Corona infection confirmed

மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரையில் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மதுரை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 இருந்தது.

இந்நிலையில் இன்று மாவட்டத்தில் ஒரே நாளில் 170 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,449 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு
மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
3. மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.