தேசிய செய்திகள்

வடகிழக்கில் கொரோனா பாதிப்பு மிக குறைவு; 4 மாநிலங்களில் இறப்பு இல்லை: அரசு தகவல் + "||" + Corona prevalence is very low in the Northeast; No deaths in 4 states: Government

வடகிழக்கில் கொரோனா பாதிப்பு மிக குறைவு; 4 மாநிலங்களில் இறப்பு இல்லை: அரசு தகவல்

வடகிழக்கில் கொரோனா பாதிப்பு மிக குறைவு; 4 மாநிலங்களில் இறப்பு இல்லை:  அரசு தகவல்
நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  1 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.  63 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மராட்டியத்தில் 6 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது என மத்திய அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 3,731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  5,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றுள்ளனர்.  வடகிழக்கு மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்த அளவில் உள்ளது.  சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் இறப்புகளே இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; டெல்லியில் நாளை மத்திய உள்விவகார நாடாளுமன்ற நிலை குழு ஆலோசனை கூட்டம்
கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசிக்க டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாளை கூடுகிறது.
2. விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்து உள்ளது.
3. பல்லடத்தில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்தனர்; சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை
பல்லடம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதித்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சப்-இன்ஸ்பெக்டர் மட்டும் சிகிச்சை பெறுகிறார்.
4. விருதுநகரில் ஒரேநாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர், 10 நர்சுகளுக்கு கொரோனா
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மற்றும் 10 நர்சுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.