மாநில செய்திகள்

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் + "||" + 59 percent people in Chennai Have recovered from the corona

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ஆயிரத்தை தாண்டியே பதிவாகி கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் இதுவரை 47 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் இதுவரை 27 ஆயிரத்து 986 பேர் குணம் அடைந்துள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 59 புள்ளி 03 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர். சென்னையில் இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த பாதிப்பில் 1.5 சதவீதம் ஆகும். 18 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது மொத்த பாதிப்பில், 39 புள்ளி 5சதவீதம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5. சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.