மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + New peak in Tamil Nadu today; Coronation affects 3,645 people in one day

தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிய உச்சம்; ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.  இதனால் தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கூடுதலாக சென்றுள்ளதுடன் புதிய உச்சம் அடைந்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்து இருந்தது. கடந்த 8 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் நேற்று 3 ஆயிரத்தை கடந்தது.

சென்னையில் மட்டும் நேற்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்தது.

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 191 பேருக்கும், காஞ்சிபுத்தில் 98 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 170 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதுதவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக நேற்று ராமநாதபுரத்தில் 140 பேருக்கும், மதுரையில் 204 பேருக்கும், வேலூரில் 172 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்று 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது. இதில் சென்னையில் மட்டும் 694 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் நேற்று 2,236 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக அதிகரித்தது. தமிழகம் முழுவதும் 30,064 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

கடந்த 17ந்தேதி, 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கடந்த 24ந்தேதி 2,866 ஆக உயர்ந்திருந்தது.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
2. கொரோனா பாதிப்பு; மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
மராட்டியத்தின் மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
3. மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 39 பேர் பலி
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று 39 பேர் பலியாகி உள்ளனர்.
4. கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
5. தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா; சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது
தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது.