தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி + "||" + Relaxation in the lockdown will be allowed from 5 am to 10 pm in the State: West Bengal Chief Minister Mamata Banerjee

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், சில மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்திய போது கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30 ஆம் தேதியுடன் (ஜூன்) முடிவுக்கு வர உள்ளது.

மாநிலத்தில் கொரோன வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில்,  அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கில் காலை 5 மணி முதல் 10 மணி வரை சில தளர்வுகள் இருக்கும் என்னும் எஞ்சிய நேரங்களில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. தூக்கில் பிணமாக தொங்கினார்
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
2. கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு:வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடின
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
3. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் 126 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. மேற்கு வங்காளத்தில் பேருந்துகள் முழு அளவில் இயக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை நேற்று முதல் முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அந்த மாநில மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது