தேசிய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் - ராகுல் காந்தி கடும் கண்டனம் + "||" + The death of the father-son of the saththamkulam The brutality of the police is a heinous crime Rahul Gandhi condemned

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் - ராகுல் காந்தி கடும் கண்டனம்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் - ராகுல் காந்தி கடும் கண்டனம்
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம் என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் உயிரிழப்புகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

''போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது மிகவும் சோகமான ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.