தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 445 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Karnataka reports 445 new COVID19 positive cases today,taking the total number of positive cases in the State to 11005

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 445 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 445 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகத்தில் மேலும் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் நேற்று வரை 442 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், இன்று ஒரேநாளில் புதிதாக 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 11,005 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 246 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்னிக்கை 6,916 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3905 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கர்நாடக அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது? - மந்திரி சுரேஷ்குமார் பதில்
கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போது? என்பது பற்றி மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.
5. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.