தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 5024 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Maharashtra reports 175 deaths and 5024 new COVID19 positive cases. Out of the total 175 deaths

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 5024 பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: புதிதாக 5024 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக இதுவரை இல்லதா அளவாக 5024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

நேற்று வரை மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 661 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 741ஆக உயர்ந்து இருந்தது. 

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 5024 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 175 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 2,362 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ்பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 79, 815 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 65,829 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
2. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் கொரோனாவை நிச்சயம் தோற்கடிப்போம் என்று அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.