தேசிய செய்திகள்

அரியானாவை தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம் + "||" + Earthquake today in Meghalaya and Ladakh following Haryana

அரியானாவை தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம்

அரியானாவை தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கம்
அரியானாவை தொடர்ந்து மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன.
ஷில்லாங்,

மேகாலயாவின் துரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் இன்று மிதஅளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானாவின் ரோக்தக் நகர் அருகே இன்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி இருந்தது.  அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் வட பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.  அரியானா, மராட்டியம், மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஷ்கார் என கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் அச்சம் ஏற்படுத்தி உள்ளது.