தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை + "||" + In Kerala More than 150 people Corona virus infection State Health Department

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை

கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்தாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.  இதையடுத்து வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 91 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 48 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 6 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று மேலும் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 435 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
3. கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
5. கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.