தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு + "||" + 2,492 to Delhi rise in Coronation Casualties

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு
டெல்லியில் இன்று ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதனையடுத்து தமிழ்நாட்டை விட அதிக எண்ணிக்கையுடன் முன்னிலையில் உள்ளது.  இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது.  

டெல்லியில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பாதிப்பினை குறைக்க, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 30ந்தேதி வரை பரிசோதனை செய்யப்படுகிறது.  வருகிற ஜூலை 6ந்தேதி வரை டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளிலும் பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், 3,460 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77 ஆயிரத்து 240 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 63 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், பலி எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.  27,675 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 39 பேர் பலி
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று 39 பேர் பலியாகி உள்ளனர்.
2. கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
3. மராட்டியத்தில் 279 போலீசாருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
மராட்டிய காவல் துறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 5,454 ஆக இன்று உயர்வடைந்துள்ளது.
4. தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா; சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது
தென்காசியில் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிவகிரி காவல் நிலையம் மூடப்பட்டது.
5. கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.