தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது + "||" + India Crosses 5 Lakh COVID Cases, Over 5,000 Cases In A Day In Maharashtra

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 6 நாட்களாக தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20-ந் தேதி 14,516 பேருக்கும், 21-ந் தேதி 15,413 பேருக்கும், 22-ந் தேதி 14,821 பேருக்கும், 23-ந் தேதி 14,933 பேருக்கும், 24-ந் தேதி 15,968 பேருக்கும் 25 ஆம் தேதி 16,922 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. 

இந்த நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இன்று இரவு நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. மராட்டியத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் இன்று  கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
2. மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
மராட்டியத்தில் சிறைக்கைதிகள் 363 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
3. இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள்
சீனாவுடன் உள்ள பொருளாதார தொடர்பை துண்டிக்க இந்தியா வேகமான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முடிவுகளை எடுத்து உள்ளது.
4. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் ?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
5. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு
இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்ந்து இருக்கிறது.