தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை மந்திரி பூரண குணமடைந்து வீடு திரும்பினார் + "||" + Delhi Minister Satyendar Jain Recovers From COVID, To Be Discharged Today

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை மந்திரி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை மந்திரி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்
கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணம் அடைந்ததால் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புதுடெல்லி, 

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு (வயது 55) திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததை தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே அவருக்கு நிமோனியாவும் இருப்பது தெரியவந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாததால், டெல்லியில் உள்ள மேக்ஸ் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அவருடைய உடல்நிலை சீராக இருந்து வந்தது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்த சத்யேந்திர ஜெயின் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி நேற்று வீடு திரும்பினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 1,906 ஆக உயர்ந்துள்ளது.
2. அமெரிக்காவில் புதிய உச்சம்-ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அரியலூரில் மேலும் 4 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 492 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 461 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி இருந்தனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது.
5. தேனி மாவட்டத்தில் ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர், செவிலியர்கள் உள்பட 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,495 ஆக உயர்ந்துள்ளது.