தேசிய செய்திகள்

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Delhi Discusses Cutting 50% Syllabus, Schools To Stay Closed Till July 31

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த சூழலில், டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை மனிஷ் சிசோடியா வெளியிட்டார்.  மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் திட்டம் பற்றியும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக மனிஷ் சிசோடியா தெரிவித்தார். 

மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழலுக்கு தகுந்தால் போல் தயாராக  திட்டம் உருவாக்கப்படும். எனவே மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள உதவும் வகையில் இந்த திட்டம் இருக்கும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும்? - ஆய்வில் புதிய தகவல்
கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குணமடைந்தவர்களிடம் எவ்வளவு நாட்கள் இருக்கும்? என்பது குறித்து புதிய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
2. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. ‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.
5. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.