தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அசாமில் இரவு நேர ஊரடங்கு + "||" + Assam announces 2-week lockdown in Kamrup district, weekend curfew in urban centres

கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அசாமில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அசாமில் இரவு நேர ஊரடங்கு
கவுகாத்தி நகரம் அடங்கிய காம்ருப் (மெட்ரோ) மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கு போடப்பட்டு, அதுவும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது.
கவுகாத்தி, 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக தற்போது மாநில அரசுகள், தங்கள் மாநில நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன. அந்த வகையில் அசாமில் மாநிலம் முழுவதும் இரவு நேர (12 மணி நேரம்) ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நேற்று இரவு 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அந்த மாநில சுகாதார மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

மேலும், கவுகாத்தி நகரம் அடங்கிய காம்ருப் (மெட்ரோ) மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கு போடப்பட்டு, அதுவும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக பார்க்கப்படக்கூடிய கவுகாத்தியில் கடந்க 15-ந் தேதியில் இருந்து கொரோனா பரவல் வேகம் எடுத்து 762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 677 பேருக்கு பயண தொடர்புகள் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து திரும்பியுள்ளவர்கள் மூலமே தொற்று பரவுவதாக சுகாதார மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்கு பின்னர் கவுகாத்தியில் ஊரடங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார். அசாமில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 6,646 ஆக உள்ளது. 4,033 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,601 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியில் வீட்டில் தயாரிக்கும் முக கவசம் நல்லது - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியைக்கொண்டு வீட்டில் தயாரிக்கிற முக கவசம் நல்லது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய நடவடிக்கை; உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மன உளைச்சலில் தொடங்கி தற்கொலை வரைக்கும் தள்ளுகிறது கொரோனா... பதறும் மனநல நிபுணர்கள்
ற்கொலை மரணங்களுக்கு பாதை போட்டுக்கொடுக்கிறது, பாழாய்ப்போன கொரோனா வைரஸ் தொற்று.
4. கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் உயிரிழப்பு இல்லை-மத்திய அரசு தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
5. முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் தொற்று கண்டறிவது எளிதாக உள்ளது- மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேட்டி
சென்னையில் முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று கண்டறிவது எளிதாக உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.