உலக செய்திகள்

பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு + "||" + Unknown Suspect Sets Passenger Bus On Fire In Front Of Brazil President's Palace - Reports

பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு

பிரேசிலில் அதிபர் மாளிகைக்கு அருகே பேருந்துக்கு தீ வைப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.
பிரேசிலியா,

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை சரியாக கையாளவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் அதிபர் ஜெயிர் போல்சனரோவினா கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அதிபர் மாளிகை முன்பு தனிநபர் ஒருவர் போராட்டம் நடத்தினார். அப்போது அந்த நபர் அதிபர் மாளிகை அருகே சென்று கொண்டிருந்த பஸ்சை திடீரென வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பஸ்சில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பஸ்சுக்கு தீ வைத்து நபரை உடனடியாக மடக்கிப் பிடித்தனர். அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர்.

அந்த நபர் பஸ்சுக்கு தீ வைத்த உடனேயே பயணிகள் வெளியேறியதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

தொடர்புடைய செய்திகள்

1. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விபரம்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்று ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம்
நாட்டில் கொரோனா பாதிப்புகளில் 50 %க்கும் மேல் மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு:வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடின
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
5. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.