தேசிய செய்திகள்

அரியானாவில் தொழில்நுட்பக் கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் + "||" + IAF helicopter makes emergency landing on expressway in Haryana

அரியானாவில் தொழில்நுட்பக் கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

அரியானாவில் தொழில்நுட்பக் கோளாறால் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்
அரியானாவில் தொழில்நுட்பக் கோளாறால் நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
சண்டிகர், 

அரியானா மாநிலம் சோனிபட் நகரில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. கிளம்பிய சிறிது நேரத்தில் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

அதன்படி சோனிபட் நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்ட்லிகாசியாபாத்பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் சாலையின் இருபுறத்திலும் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன போக்குவரத்தை நிறுத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சாலை போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே புதிய சட்டம்
அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
2. அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
அரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
3. நாட்டிலேயே முதல் மாநிலமாக பொதுப்போக்குவரத்தை மீண்டும் தொடங்கிய அரியானா!
அரியானாவில் பொதுப்போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை