உலக செய்திகள்

ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது, சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம் + "||" + China opens another front in Depsang plains amid border row with India along LAC

ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது, சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்

ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது, சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்
லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது.
ஜெய்சால்மீர், 

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கில் சீனா வாலாட்டியது. இதைத்தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்த எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

அதை சாக்காக வைத்து, அங்கு விமான நிலையம், ரெயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை ராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிறது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் சீனா ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது. அங்கு பாகிஸ்தானியர் கூட அனுமதியின்றி நுழைய முடியாது.

எல்லை பகுதியில் கட்டுமான பணியில் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள், இப்பணியை செய்து வருகின்றனர். சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்துள்ளன.

கவனம் செலுத்துங்கள்

ராஜஸ்தான் எல்லைக்கு 8 கி.மீ. தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அங்கு 50 எண்ணெய் கிணறுகள், சீன நிபுணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்குள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாக இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் கூறியுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பொறுப்பை சீன ராணுவமே கவனிக்கிறது. இதனால், எல்லை பாதுகாப்பு படை உஷாராக இருப்பதாக அதன் ஐ.ஜி. அமித் லோதா தெரிவித்தார். மத்திய அரசு, தனது முழு கவனத்தையும் ராஜஸ்தான் எல்லைப்பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
2. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்
சீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.
3. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்
கல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என முதல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.
4. சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம்
சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.
5. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே வினியோகம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவித்து உள்ளது.