தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்வு; மத்திய சுகாதார மந்திரி + "||" + Our recovery rate has gone above 58%: Union Health Minister Dr Harsh Vardhan

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்வு; மத்திய சுகாதார மந்திரி

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்வு; மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  முதல் இடத்தில் மராட்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் தலைநகர் டெல்லியும் உள்ளன.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது.  தொடர்ந்து பல மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் ஹர்ச வர்தன் தலைமையில் காணொலி காட்சி வழியே மந்திரிகள் குழுவினருடனான கூட்டம் இன்று நடந்தது.  இதில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஹர்ச வர்தன், நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 58% ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 3 லட்சம் பேர் வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இறப்பு விகிதம் 3% என்ற அளவில் உள்ளது.  இது மிக குறைவாகும்.  கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பு அடைவது 19 நாட்கள் வரை குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கொரோனோ பாதிப்பு 3,703 ஆக உயர்வு
மதுரையில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது.
2. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 167 ஆக உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.
4. டெல்லியில் கொரோனா பாதித்த கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்வு
டெல்லியில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது.
5. மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு
மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 41 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.