தேசிய செய்திகள்

காஷ்மீரில் போலீசார் வேட்டையில் ரூ.65 கோடி போதை பொருள், ஆயுதங்கள் பறிமுதல் + "||" + Rs 65 crore worth of narcotics and arms seized by police in Kashmir

காஷ்மீரில் போலீசார் வேட்டையில் ரூ.65 கோடி போதை பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் போலீசார் வேட்டையில் ரூ.65 கோடி போதை பொருள், ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.65 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போதை பொருள் கடத்தப்படுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து மாநில போலீசார் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் கடத்தல் சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.  அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.65 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இது தவிர்த்து, கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.  தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.