தேசிய செய்திகள்

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு + "||" + 4.4 Recorded in Kashmir earthquake Richter

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.4 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் இன்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி இருந்தது.  இதேபோன்று மேகாலயாவிலும் ரிக்டரில் 3.3 அளவிலான நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது.

அரியானாவின் ரோக்தக் நகர் அருகே நேற்று பிற்பகல் 3.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி இருந்தது.  அரியானாவில் கடந்த 4 நாட்களில் 2வது முறையாக நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் வட பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.  அரியானா, மராட்டியம், மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஷ்கார் என கடந்த 5 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு
மிசோரமில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.
2. அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
3. அரியானாவில் தொடரும் நிலநடுக்கம்; பொதுமக்கள் அதிர்ச்சி
அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2வது முறையாக இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
4. அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
அரியானாவில் லேசான அளவில் நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
5. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.